நடிகர் தனுஷின் பிறந்தநாள் விழா நேற்று அமோகமாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை அளித்த கலைப்புலி எஸ்.தாணு தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தை தனுஷ் பிறந்தநாள் விழா ஒன்றில் அறிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் நமக்கு பட்டமெல்லாம் வேண்டாம், ரசிகர்களின் அன்பு போதும் என்றார்.

தனுஷ் ஹிந்தி திரைப்பட துறையில் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் ஹிந்தியில் நடித்த முதல் படம் ‘ராஞ்சனா’. ஆனந்த எல் ராய் இப்படத்தை இயக்க, சோனப் கபூர் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஹிந்தியில் முதல் படமாக இருந்தாலும் நல்ல வெற்றிப்படமாக இது அமைந்தது. இதனையடுத்து இயக்குனர் பால்கி இயக்கத்தில் சமிதாப் படத்தில் நடித்திருந்தார். இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மீண்டும் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார். ஆனந்த எல் ராய் இயக்கும் இந்த படத்தில் ஹிருத்திக் மற்றும் தனுஷ் என இருவரும் நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியானது.
இதையடுத்து இச்செய்தியை ஹிருத்திக் ரோஷன் மறுத்துள்ளார். இது ஒரு வதந்தி, அப்படி ஒரு பேச்சு வார்த்தையே நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.