Hrithik Roshan ad controversy ; zomato has apologized

Advertisment

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கீல் ஹிரிதிக் ரோஷன், நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே விளம்பர படங்களிலும் கவனம் செலுத்தி வரும் ஹிரிதிக் ரோஷன் சமீபத்தில் சொமேட்டோ நிறுவன விளம்பரத்தில் நடித்தார்.

இதில் மகாகல் என்ற இடத்தில் இருந்து ஹிரிதிக் ரோஷன் ஆர்டர் செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். மகாகல் என்ற இடம் மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலைக் குறிப்பதாகவும், இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறி மகாகல் கோவில் மதகுருக்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அந்த விளம்பரத்தை நீக்கக்கோரியும் இது தொடர்பாக ஜொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்கக் கோரியும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரி தங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், "ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த அந்த விளம்பரத்தில் தாலிகள் என இடம்பெற்றுள்ளது உஜ்ஜயினியில் உள்ள மகாகல் உணவகத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டதே தவிர உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலை இல்லை. மஹாகல் உணவகம் உஜ்ஜயினியில் உள்ள எங்களின் உயர்-வரிசை உணவக பட்டியலில் ஒன்றாகும். யாருடைய நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமில்லை. அந்த விளம்பரம் இனிமேல் ஒளிபரப்பப்படாது. எங்கள் மன்னிப்பை கோருகிறோம்" எனத்தெரிவித்துள்ளனர். .

Advertisment