Skip to main content

"21 நாட்கள் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்" - ஹிருத்திக் ரோஷன்

Published on 03/04/2020 | Edited on 03/04/2020


சீனாவின் வுஹான் மாகாணத்தில் பிறந்து உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது.

 

gdg

 

இதனால் நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 21 நாட்கள் ஊரடங்கு குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்...''ஊரடங்கு முடிந்த 22வது நாள் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்.ஊரடங்கின் முடிவை வெற்றியாக அர்த்தம் கொள்ளக்கூடாது.கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும்வரை நாம் சமூக விலகலை தொடர வேண்டும்.இதற்கு பல மாதங்கள் வரை ஆகலாம்.தயவு செய்து இதனை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் துவங்கும் ஹிரித்திக் ரோஷனின் வார் - 2

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
hrithik roshan war 2 update

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் வார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. 

இப்படம் குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய ஹிரித்திக் ரோஷன், “வார் 2 படம் விரைவில் துவங்க இருக்கிறது. படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டதை விட முன்கூட்டியே துவங்க உள்ளது” என்று தெரிவித்தார்.  இப்படத்தின் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23 ஆம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. 

இதற்காக ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஹிரித்திக் ரோஷன், "கபீர் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளான். இதனால் மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கபீரை இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்த எனக்கு சவாலாக இருக்கும். அவனின் மற்றொரு கோணம் வித்தியாசமாக இருக்க போகிறது," என்று தெரிவித்தார். இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Next Story

முத்தக் காட்சி - படக்குழுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Fighter gets legal notice from IAF officer over kissing scene

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியான படம் ‘ஃபைட்டர்’. வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு விஷால் மற்றும் ஷேகர் இருவரும் இசையமைத்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம், மோசமான விமர்சனங்களையே பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. 

இதையடுத்து படத்தின் மீதான விமர்சனம் குறித்துப் பேசிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “90 சதவீத இந்தியர்கள் விமானத்தில் பயணித்ததே கிடையாது. பலர் விமான நிலையத்திற்குக் கூட போனதில்லை. அப்படியிருக்கும் சூழலில் இப்படத்தில் காட்டப்பட்டுள்ள வான்வெளி பயணம் அவர்களுக்கு எப்படி புரியும்” என்றிருந்தார். இது சர்சைக்குள்ளானது.

இந்த நிலையில் இப்படத்தில் விமானப்படையை அவமதித்து விட்டதாக அசாமைச் சேர்ந்த விமானப் படை அதிகாரி சவுமியா தீப் தாஸ் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படத்தின் இறுதியில் விமானப்படை சீருடன் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முத்தக் காட்சியில் நடித்து அவமதித்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதற்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இதேபோல் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த 'பதான்' படத்தில், 'பேஷரம் ரங்' பாடலில் காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து இப்படம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.