Advertisment

'ஹ்ரிதயம்'  படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பாலிவுட் தயாரிப்பாளர் 

Hridayam Hindi Tamil Telug remake rights acquired karan johar

பிரபல மலையாள எழுத்தாளரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் மகன்வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின்மகன் பிரணவ் 'ஹ்ரிதயம்'படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இளைஞர்களின் கல்லூரி காதலையும், அதற்கு பிந்தைய வாழ்க்கையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் வெளியான பிறகேகூடுதல் வரவேற்பைபெற்றது. அத்துடன்'ஹ்ரிதயம்மலையாள படம் என்றாலும் கூட அதில் சென்னையின் அழகையும், வடசென்னையின் வாழ்வியலையும் அப்படியே காட்டியதற்காக ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள்மத்தியில் பெரும் பாராட்டுகளைபெற்றது.

Advertisment

இப்படத்தின் மலையாள வெற்றியை தொடர்ந்து பிற மொழிகளில் தயாராகவுள்ளது. இதன் ரீமேக் உரிமையை பெறுவதற்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில்'ஹ்ரிதயம்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிக்கானரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகரும், ஃபாக்ஸ் ஸ்டுடியோவும் இணைந்துகைப்பற்றியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைதயாரிப்பாளர் கரண் ஜோகர் தற்போது வெளியிட்டுள்ளார். விரைவில் ரீமேக் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisment

tamil cinema hridayam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe