Skip to main content

விஜய்யை மீண்டும் சீண்டுகிறாரா ஹெச்.ராஜா?

 

Is H.Raja teasing Vijay again?

 

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 

 

பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். இப்படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் அதை பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

 

இந்நிலையில், சினிமா விநியோகஸ்தரும் அரசியல் பிரமுகருமான ஜே.எஸ்.கே.கோபி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று அணில் வேட்டைக்கு செல்ல உகந்த நாள்’ என்று பதிவிட்டுள்ளார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா, ‘எந்த அணில்’ என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு ஜே.எஸ்.கே.கோபி, ‘அது வேற அணில். வேற டிபார்ட்மெண்ட்’ என்று பதிலளித்துள்ளார்.

 

Vijay

 

ஏற்கனவே விஜய்யின் கத்தி, மெர்சல், பீஸ்ட் முதலிய படங்கள் வெளிவரும் போது விஜய்யை ஹெச்.ராஜா விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல வாரிசுக்கும் ஏதாவது விமர்சிக்கிறாரா? அதன் துவக்கம் இதுவா? என்று விஜய் ரசிகர்கள் அவரை கேள்வி கேட்டும் விமர்சித்தும் வருகிறார்கள்

 

சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களை அணில் என்று குறிப்பிடுவது ஒரு கிண்டல் வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.