fsfafa

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisment

இதில், திமுக சார்பாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பிற்பகல் நிலவரப்படி நடிகர் உதயநிதி ஸ்டாலின் 91,776 வாக்குகள் பெற்று 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இவருடன் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.எஸ் கஸ்ஸாலி 23,643 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். உதயநிதியின் வெற்றியை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.