Skip to main content

மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா..?

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

gherh

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. 

 

இதில், தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி 1,23,538 வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி 81,829 வாக்குகளுடன் தோல்வியை சந்தித்துள்ளார். இவர்களுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 426 வாக்குகள் பெற்றுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்