How many theaters for 'Beast' and 'KGF2'? - New information released

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில்ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் படம் 'பீஸ்ட்' . இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் தற்போது முன்பதிவு டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'பீஸ்ட்' மற்றும் 'கே.ஜி.எஃப் 2' படங்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி தமிழகம் முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் விஜயின் 'பீஸ்ட்' படம் வெளியாகும் எனத்தகவல் வெளிவந்துள்ளது. கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கே.ஜி.எஃப் 2' படம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாகம் 2018-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் 200 முதல் 250 திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Advertisment