/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rr_10.jpg)
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்'. ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வசூலில் பல சாதனைகள் படைத்து வருகிறது. இப்படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டி.வி.வி.தனய்யா தயாரித்திருந்தார்.
இந்நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்' படம் மூன்று நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது. தற்போது இப்படம் 1000 கோடி ருபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜமௌலியின் முந்தைய படமான 'பாகுபலி 2' உலகம் முழுவதும் 1,700 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த சாதனையை 'ஆர்.ஆர்.ஆர்' படம் விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் படக்குழு மும்பையில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகர் அமீர்கான், ஹுமா குரேஷி, கரண் ஜோஹர் மற்றும் பிரபல தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)