priya bavani shankar

செய்தி வாசிப்பாளராகத் தொடங்கி பின்னர் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி தனக்கென ரசிகர்களைச் சம்பாதித்து அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் பிரியா பவாணி சங்கர்.

Advertisment

'மான்ஸ்டர்' வெற்றியைத் தொடர்ந்து பிரியா பவாணி சங்கரும் எஸ்.ஜே. சூர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் 'பொம்மை'. மேலும் ஐந்து படங்களில் நடித்து வரும் பிரியா பவாணி சங்கர் குறித்து அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன.

Advertisment

சமீபத்தில்கூட, பிரியாவும் அவரது காதலரும் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் பிரியா பவாணி சங்கர் பதிவுஒன்றை பதிவிட்டுள்ளார். செல்ஃபோனை பார்த்து, சிரித்தபடி அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவுடன், ''என்னைப் பற்றிய கிசுகிசுக்களைப் படிக்கும் போது இப்படிதான் இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.