Advertisment

8 மாதமாக விடுதியில் தங்கியிருந்த நடிகை விஜயலட்சுமி... உரிமையாளர் பரபரப்பு புகார்!

vijayalakshmi

Advertisment

கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இதனைத் தொடர்ந்து, 'பூந்தோட்டம்' என்னும் தமிழ்ப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். 'ப்ரண்ட்ஸ்' படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் சூர்யாவுக்கு ஜோடியாகவும் இவர் நடித்தது பிரபலமான ஒன்று. கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்த விஜயலட்சுமி திருவான்மியூரிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளார். பிறகு, ஜூலை மாதம் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி கடந்த எட்டு மாதங்களாக விடுதியில் தங்கியதற்கு 3 லட்சம் ரூபாய் பணம் செலுத்தவில்லை என்று அவர் தங்கியிருக்கும் விடுதியின் உரிமையாளர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து விரைவில் அந்தப் பணத்தைச்செலுத்திவிடுவதாக அந்த விடுதி உரிமையாளருக்கு விஜயலட்சுமி உறுதியளித்துள்ளார்.

actress vijayalakshmi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe