Priya Bhavani Shankar

Advertisment

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹாஸ்டல்'. இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது, சில மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே யூ-டியூப் தளத்தில் ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகிவருகிறது.