hostel

Advertisment

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹாஸ்டல்'. இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது, சமீபத்தில் நிறைவடைந்தது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும், படம் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.