
பல வெற்றி படங்களைதயாரித்த ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு ‘ஹாஸ்டல்’எனப் பெயரிடபட்டுள்ளது. அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, விஜய் டிவி யோகி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ஹாஸ்டல்’படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து இதன் இறுதிக்கட்ட பணிகள்தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)