tovino thomas

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். பல வெற்றி படங்களை தொடர்ச்சியாககொடுத்த இவர், அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisment

லாக்டவுனில் இவர் நடிப்பில் உருவான சூப்பர் ஹீரோ படம், 'மின்னல் முரளி' ட்ரைலர் வெளியாகி செம வைரலானது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியாகிறது.

Advertisment

இந்நிலையில் தற்போது டொவினோ தாமஸ் நடித்து வரும் படம் ‘கள’. இந்த படப்பிடிப்பின்போது சண்டை காட்சியில் ஸ்டண்ட் மேன் வயிற்றில் உதைத்துள்ளார். அப்போது ஏற்பட்டவலியைப் பொறுத்துகொண்டுநடித்துள்ளார் டொவினோ,ஆனால்அந்த வலி அடுத்த நாளும் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில், வயிற்றுக்குள்ளே காயம் ஏற்பட்டு இரத்தம் கசிவு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

இதனால், உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். தற்போது ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது.

பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் டொவினோ விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் டொவினோ தாமஸின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.