உயிருக்குப் போராடிய ரிஷி கபூர் வீடியோ... மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கை!

rishi ka poor

பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமான நடிகர் ரிஷி கபூர் கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 67 வயதான ரிஷி கபூருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 30 ஆம் தேதி காலையில் ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அவருடைய இறுதி அஞ்சலி உடனடியாக நடைபெற்று தகனம் செய்யப்பட்டது. பலரும் சமூக வலைத்தளங்களின் மூலமாக அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக இருப்பதால்தில்லியில் இருக்கும் அவருடைய மகளால் மும்பையில் நடைபெற்றஇறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாமல் வீடியோகாலில் பார்த்து அஞ்சலி செலுத்தினார்.

http://onelink.to/nknapp

இதனிடையே நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் ஐசியூவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை அங்கு யாரோ மொபைல் மூலமாக வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவால் பலரும் மருத்துவமனை நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில், “எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வரும் தகவல் எங்கள் கவனத்துக்கு வந்தது. எங்கள் மருத்துவமனையைப் பொறுத்தவரை நோயாளியின் தகவல்களைப் பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

இது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

rishi kapoor
இதையும் படியுங்கள்
Subscribe