
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த வாரத்தில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் வெண்டிலேட்டர் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தினசரி அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அவரது மகன் சரண் வீடியோ மூலம்தெரிவித்து வருகிறார். மருத்துவ நிர்வாகமும் உடல்நிலை குறித்து அவ்வப்போவது அறிக்கை வெளியிட்டது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 26) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 தொற்று காரணமாக எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம், தொடர்ந்துசெயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. விழிப்புடன், சொல்வதைப் புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறார். தொடர்ந்து எங்களது மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)