Published on 14/08/2020 | Edited on 14/08/2020

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.