spb

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா தொற்று, பலரையும் பாதித்து வருகிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி.பி குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனால் அவ்வப்போது அவரது மகன் வீடியோவின் மூலம் மக்களுக்கு எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தெரிவித்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் இரண்டு நாட்கள் கழித்து நேற்று மாலை மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கோவிட்-19 தொற்று காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் இருந்து வருகிறார்.

Advertisment

அவர் தற்போது சீரான நிலையில் உள்ளார். நல்ல விழிப்புடன், சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார். ஃபிசியோதெரபி சிகிச்சையில் பங்கேற்று வருகிறார். எங்களது மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.