Skip to main content

'அரண்மனை 3' படப்பிடிப்பு தளத்தில் நடந்த திகில் சம்பவம்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

Aranmanai 3

 

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்க, தற்போது மூன்றாம் பாகத்தை உருவாக்கி ரிலீசிற்கு தயாராகிவருகிறது படக்குழு. ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் அரண்மனை 3 திரைப்படம் வெளியாக இருக்கிறது.

 

ad

 

அரண்மனை 3 படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் படப்பிடிப்பு அனுபவம் பற்றி கூறுகையில், "குஜராத் மாநிலம், ராஜ்கோட் என்னும் ஊரில் மகாரானா ராஜ் ஸ்ரீ அமர் சிங் எனும் ராஜ்புத் அரசரால் 1907ம் ஆண்டு கட்டப்பட்ட வேண்கனியர் பேலஸ் அரண்மனையில்தான் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கினோம். அந்த அரண்மனை மிகப்பழமையான அரண்மனை. இரவு நேரங்களில் திடீரென குதிரை கனைத்துக்கொண்டே அரண்மனையைச் சுற்றிவரும். இரவு நேரங்களில் கேட்கும் இது போன்ற சத்தம் படக்குழுவினர் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியது" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்