கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது ஹோம்பேல் பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 1, 2, காந்தாராஉள்ளிட்ட படங்கள் வசூலை வாரி குவித்தது. இப்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்', மலையாளத்தில் 'தூமம்' உள்ளிட்ட சில படங்களைத்தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சினிமா என்பது பழங்காலத்திலிருந்தே அனைவராலும் பார்க்கப்பட்டு, பாராட்டப்பட்டு மற்றும் மக்களோடு கலந்து வாழ்ந்து வருகிறது.
நம் வாழ்வில் கஷ்டமான நேரங்களில் கூட அதிலிருந்து விடுபட சினிமாவுக்கு பெரிய பங்கு இருக்கிறது. மேலும் நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம். பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியா, நாட்டின் இளைஞர்களிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வர சினிமா ஒரு பரந்த வாய்ப்பாக நமக்கு வழங்குகிறது.
இந்த ஆண்டில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அழுத்தமான படங்களைத்தயாரிப்பதாக உறுதியளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, பொழுதுபோக்கு துறையில் நிலையான வளர்ச்சிக்காக வரும் 5 ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்ய உறுதியளிக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.