hollywood stunt director Yannick Ben joins to samantha yashoda film

Advertisment

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா தற்போது'யசோதா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரி நாராயணன் இருவரும் இணைந்து இப்படத்தைஇயக்குகின்றனர். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் மதுபாலாவாக நடிக்கிறார்.

இப்படத்தில்அதிரடி சண்டை காட்சியில்சமந்தாநடிக்க உள்ள நிலையில் ஸ்டண்ட் இயக்குநராக ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர்யானிக் பென் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்சமந்தா நடிப்பில் வெளியான பேமிலிமேன் 2 தொடரில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றிய நிலையில் தற்போது யாசோதாபடத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்.ஸ்டண்ட் இயக்குநர்யானிக் பென்னுடன்சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.