/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/steve bing.jpeg)
பிரபல ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஸ்டீவ் பிங் தற்கொலை செய்துகொண்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தான் தங்கியிருக்கும் குடியிருப்பின் 27வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் சமயத்தால் அவர் தனிமையில் இருந்ததாகவும், அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என உறுதியாக தெரிவிக்கவில்லை, போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
55 வயதாகும் ஸ்டீபன் அமெரிக்க அரசியலிலும் பங்காற்றி வருகிறார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் க்ளிண்டனின் நெருங்கிய நண்பரான இவர், க்ளிண்டன் அறக்கட்டளைக்கு பல நன்கொடைகள் வழங்கியுள்ளார்.
Follow Us