A Hollywood film company remakes an Indian film before its release

பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோகர், தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். இவர் தற்போது ‘கில்’ படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் நிகில் நாகேஷ் இயக்கத்தில் லக்‌ஷயா, ராகவ் ஜூயல், தன்யா மணிக்தலா ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘கில்’ படம் வருகிற ஜூலை 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே, ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் நடிப்பில் உலகம் முழுவதும் ஹிட்டான ‘ஜான் விக்’ சீரிஸை தயாரித்த 87 லெவன் எண்டர்யின்மெண்ட் நிறுவனம், தற்போது ‘கில்’ படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும், டிரிபெகா திரைப்பட விழாவிலும், ‘கில்’ படம் திரையிடப்பட்டிருக்கிறது. ஆக்சன் படமாக உருவாகியிருக்கும் இந்தியத்திரைப்படம், திரைக்கு வெளிவருவதற்கு முன்பாக ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.