அன்னி ஹால், தி கோல்ட் சைல்ட், சிவில் ஆக்‌ஷன், மான்ஹாட்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் சார்லஸ் லெவின். இவருக்கு வயது 70. அமெரிக்க டிவி தொடர்களின் மூலம் தன்னுடைய நடிப்பை தொடங்கியிருக்கிறார்.

Advertisment

charles levin

இவர் கடந்த 8ஆம் தேதி திடீரென மாயமானார். இதனையடுத்து தந்தையை காணவில்லை என்று சார்லஸின் மகன் போலீஸிடம் புகார் அளித்தார். போலீஸாரும் பல இடங்களில் அவரை தேடி வந்தனர். ஆனால், அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சார்லஸின் கார் ஒரேகான் மாகாணத்திலுள்ள செல்மா என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்றதை போலீஸார் கண்டுபிடித்தனர். காருக்குள் சார்லஸின் பக் நாய்க்குட்டி இறந்து கிடந்தது. கார் நின்ற இடத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு ஆண் பிணமாக இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டு இறுதியில் அது சார்லஸின் உடல்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளது ஒரேகான் போலீஸ். இதனால் அவருடைய ரசிகர்களும், குடும்பத்தினர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.