Advertisment

ஐந்து நாட்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட நடிகையின் சடலம்! 

piru lake

Advertisment

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு கலிஃபோர்னியாவிலுள்ள பிரு ஏரியில் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தனது நான்கு வயது மகனுடன் சவாரி சென்றுள்ளார் நடிகை நயா ரிவெரா.

நயா சவாரிக்குச் சென்ற மூன்று மணிநேரத்திற்குப் பிறகு, ஏரிக்கு நடுவே நயா எடுத்துச் சென்ற படகில் அவரது மகன் ஜோஸி மட்டும் தனியாக உறங்கிக் கொண்டிருந்ததை இன்னொரு படகில் சென்ற ஒருவர் பார்த்துள்ளார். அந்த நபர் ஜோஸியை மீட்டு, போலீஸிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜோஸியிடம் போலீஸ் விசாரிக்கையில், தன் தாய் நயா தண்ணீரில் நீந்தியதாகவும், அவரால் மீண்டும் படகுக்கு வரமுடியவில்லை என்றும் ஜோஸி கூறியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் சொல்லப்பட்டது.

Advertisment

முதல் இரண்டு நாட்களாக நயாவை தேடியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை என்பதால் காணாமல் போய்விட்டார் என்று காவல்துறை அறிவித்தது. இதனை அடுத்து தற்போது காணாமல்போன நடிகையில் உடல் கண்டுகெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட உடல் நடிகை ரிவேராவின் உடல்தான் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

hollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe