Advertisment

"நான் 17 முறை காரில் அடிபட்டேன்" - ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலாந்த் பேச்சு

hollywood actor tom holland talk about uncharted film

'ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, உலகம் முழுக்க பிரபல நட்சத்திரமாக மாறியிருக்கும் நடிகர் டாம் ஹாலாந்த் அடுத்ததாக, சோனி பிச்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடும் ‘அன்சார்டட்’ ஆக்சன் அட்வெஞ்சர் படத்தில் நடித்துள்ளார். இப்படம்ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என நான்கு மொழிகளில் நாளை (18.2.2022) வெளியாகவுள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் நடிகர்டாம் ஹாலாந்த்படப்பிடிப்பு தளத்தில் நடந்த சண்டை கட்சி குறித்து பகிர்ந்து கொண்டதுதான்.

Advertisment

இது குறித்துஅவர் கூறுகையில், "இப்படத்தின் விமான ஸ்டண்ட் தான் மிகவும் பெருமைப்படக்கூடிய தருணம். படப்பிடிப்பில் ஒரு கார் என்னை மோதும் விதமாக கட்சி எடுக்கப்பட்டது. அந்த எனக்கு மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருந்தது. இப்படத்தில் இதுதான் சிறந்த சண்டைக்காட்சிகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். இந்த காட்சிகளை எடுப்பதற்காக அன்றைய நாளில் மட்டும் நான் 17 முறை காரில் அடிபட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

actor tom holland spider man no way home
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe