Hollywood actor Robert De Niro welcomes seventh child at 79

ஹாலிவுட்டில் மூத்த நடிகராக வலம் வருபவர் ராபர்ட் டி நிரோ. 'காட்ஃபாதர் 2', 'குட்ஃபெல்லாஸ்', 'ஜோக்கர்' உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். 2 முறை சிறந்த நடிப்பிற்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ள இவர் தற்போது 'வைஸ் கய்ஸ்' (Wise Guys) படத்தில் நடித்து வருகிறார். மேலும் இன்னும் சில படங்கள் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது.

Advertisment

இந்த நிலையில் இவர் நடிப்பில் வருகிற 26 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'அபவுட் மை ஃபாதர்' (About My Father). இதனால் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார். அந்த வகையில் சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர் படத்தை குறித்து பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்தார். அப்போது நெறியாளர் ராபர்ட்டுக்கு 6 குழந்தைகள் இருப்பதை குறிப்பிட்டார். உடனே பேசிய ராபர்ட், "6 இல்லை 7. இப்போது ஒரு குழந்தை எனக்கு பிறந்துள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அந்த குழந்தையின் அம்மா பற்றிய விவரங்களை பகிரவில்லை.

Advertisment

79 வயதான நடிகர் ராபர்ட் டி நிரோ, 1976 ஆம் ஆண்டு டியான்னே அபோட் என்பவரை திருமணம் செய்தார். பின்பு 1988 இல் டியான்னே அபோட்டிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு நடிகை கிரேஸ் ஹைடவர் என்பவரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து 2018 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். இதனிடையே ஒரு மாடல் அழகியுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இப்போது நடிகை டிஃப்பனி சென்னுடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.