தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமா என்று இந்தியா சினிமாவில் ஒரு முக்கிய பங்கை வகித்தவர் ஏ.ஆர். முருகதாஸ். விஜயை வைத்து சர்கார் படத்தை இயக்கிய முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகிறார்.

முருகதாஸ் சர்கார் படத்திற்கு முன்பு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்றொரு படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எடுத்தார். இந்த படத்தை பார்த்த ஹாலிவுட் நடிகர் பில் டியூக், லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தால் சொல்லுங்கள் ஒரு லன்ச் ஒன்றாக சாப்பிட்டு சர்வதேச அளவில் ஸ்பை படம் ஒன்றை எடுப்பது குறித்து பேசுவோம் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அந்த ட்வீட்டில் மகேஷ் பாபுவும் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக பில் டியூக் பதிவிட்டுள்ளார்.