ADVERTISEMENT

தமிழ் சினிமா உலகம் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் 

06:06 PM Apr 07, 2018 | santhosh


தமிழ் நாட்டில் ஒரு பக்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் தயாரிப்பாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் சினிமா துறை முடங்கியுள்ளது. இப்படி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் தற்போது நடிகர் ,நடிகைகள் மற்றும் மொத்த சினிமா துறையினரும் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் போராட்டம் நடத்துகிறார்கள். காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த கண்டன அறவழி போராட்டம் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு நடிகர் சங்கம் சார்பாக கலந்து கொள்ளும்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்க்கும் இந்த போராட்டத்தில் பங்கேற்க விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம்ரவி, ஆர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும் நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளும் போராட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து இந்த போராட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள், தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழ் திரையுலகினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போராட்டத்தின் முடிவில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT