suriya

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று பகலில் சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தொடர்புகொண்ட மர்ம நபர், நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சற்று நேரத்தில் வெடித்து சிதறப்போவதாக தெரிவித்து போனை கட் செய்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அலுவலகம் சென்னை ஆழ்வார் பேட்டை, சீதாம்மாள் காலனியில் செயல்பட்டு வந்தது. தற்போது அது பூட்டிக்கிடக்கிறது. அந்த அலுவலகம் தற்போது அடையாறு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டதாக தெரிகிறது.

Advertisment

பூட்டிக்கிடந்த அந்த அலுவலகத்தை திறந்து போலீஸார் வெடிகுண்டு இருக்கிறதா என்று தீவிர சோதனை நடத்தினார்கள். குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வர் (வயது 28) என்பவர்தான் மிரட்டல் விடுத்த நபர் என்று தெரியவந்தது. அவரை மரக்காணம் போலீஸ் உதவியுடன் பிடித்தனர்.

இவர் ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும், நடிகர் விஜய் வீட்டுக்கும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்றவர் ஆவார். அவரிடம்தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.