Udhayanidhi Stalin

மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், தன்யா கோப், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'தடம்'. இரட்டை வேடத்தில் அருண்விஜய் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தெலுங்கில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்க 'ரெட்' என்ற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது. தடம் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தடம் படத்தின் கதை எனக்காக எழுதப்பட்டது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரியர்' படத்தின் 'புல்லட்' பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் இந்தத் தகவலைத் தெரிவித்தார். நேரம் சரியாக அமையாத காரணத்தால் தடம் படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை எனத் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருவதாகவும் தெரிவித்தார்.

Advertisment

ஆதித்ய மியூசிக் யூடியூப் சேனலில் வெளியான புல்லட் பாடல் 3.7 பார்வையாளர்களை கடந்து பலரின் கவனத்தை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.