தமிழ்த்திரையுலகில் ஹிப்ஹாப் தமிழா என அறியப்படும் ஆதி, 'ஆம்பள' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு, இசை, பாடல் எனக் கவனம் செலுத்தி வந்த ஆதி, 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். அவர் நடித்து, அவரே இசையமைத்த அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்தார்.
இந்தநிலையில், ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இளம் இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கவுள்ள இப்படத்திற்கு அன்பறிவு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஆதிக்கு ஜோடியாக நடிகை காஷ்மிரா நடிக்கவுள்ளார். விதார்த், ஊர்வசி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தான விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We're excited to announce our next film #Anbarivu starring @hiphoptamizha, Directed by @dir_Aswin.
Co-starring Napoleon, Vidharth @kashmira_9, Saikumar, Urvashi, @sangithakrish & Dheena.
DOP @madheshmanickam | Editor @PradeepERagav | Stunt Dinesh Subbarayan | @DoneChannel1pic.twitter.com/dNsOseWjR9
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 14, 2020