/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hiphop-adhi_0.jpg)
மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராக வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி, மீண்டும் சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார்.
2012ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு அறிமுகமானார் ஆதி. இதன் பின் சுயாதீன இசை ஆல்பங்களின் மூலம் பலருக்கும் பரிட்சயமானார். பின்னர் திசை இசையில் கவனம் செலுத்தி வர, அதன்பின் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு புது ஆல்பத்தை திங் மியூசிக்கின் மூலம் வெளியிடுகிறார் ஆதி. வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ (Naa oru Alien) ஆல்பம் மூலமாக அவர் மீண்டும் களமிறங்குகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)