Advertisment

மாணவிக்கு நீதி பெற்றுத் தரப் போராடும் ‘பி.டி.சார்’

 Hiphop Tamizha PT Sir trailer released

Advertisment

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, மீசைய முறுக்கு, நட்பே துணை, உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘வீரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' பட இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார். பி.டி.சார் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம் 2022ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாதநிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசியராக வரும் ஆதி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாவதைக் கண்டு அம்மாணவிக்காக குரல் கொடுக்கிறார். இறுதியில் அவர் நீதியை பெற்றுத் தந்தாரா இல்லையா என்பதை காதல், காமெடி, ஆக்‌ஷன், எமோஷன் கலந்து சொல்லியிருப்பதாக தெரிகிறது. இப்படம் மே 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

isari ganesh hiphop adhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe