Hiphop Tamizha Adhi movie poster going viral

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் பல ஆண்டுகளாக தரமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிடுவதில் புகழ்பெற்றது. இது தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து ஓடிடி பிளாக்பஸ்டரான 'அன்பறிவு' படத்திற்குப் பிறகு, சத்யஜோதி ஃபிலிம்ஸ் மீண்டும் அவருடன் ‘வீரன்’ என்ற புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்த தினத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது தனித்துவமான தோற்றம் மற்றும் போஸ்டர் வடிவமைப்பிற்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் சரியாக தயார்படுத்த வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தனர். அந்த வகையில், இதன் முதல் பார்வை சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.தமிழ் மற்றும் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'மரகத நாணயம்' மூலம் புகழ் பெற்ற ஏ.ஆர்.கே.சரவன் எழுதி இயக்கியிருக்கும் 'வீரன்' படத்தில் ஹிப்ஹாப் ஆதி இதுவரை செய்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தையும் நடிப்பையும் தர இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு புதியதாகவும் ரசிக்கும் வகையிலும் இருக்கும்.

Advertisment

ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் கடந்த காலங்களில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைக் கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் இவர்கள் இணைந்துள்ள இந்தப் புதிய படத்திற்கான எதிர்பார்ப்புகள் பெரிதாக உள்ளது. குறிப்பாக இப்போது வெளியாகி உள்ள இதன் ஃபர்ஸ்ட் லுக் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.படக்குழுவினர் ஏற்கனவே படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் 'வீரன்' படத்தை 2023 கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிக்கும்.நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் ஆகியவற்றின் நேர்த்தியான கலவையுடன், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் ரசனைகளை கவரும் வகையிலான ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக 'வீரன்' இருக்கும்.