Advertisment

இரட்டை வேடங்களில் கவனம் ஈர்க்கும் ஆதி... இணையத்தில் வைரலாகும் ட்ரைலர் ! 

hiphop adhi starring anbarivu movie trailer released

தமிழ் சினமாவில்இசையமைப்பாளராகஅறிமுகமான ஆதி, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'சிவகுமாரின் சபதம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ஆதி, அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கும் 'அன்பறிவு' படத்தில் நடித்துள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். நெப்போலியன், விதார்த், தீனா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆதி இசையமைக்கிறார். மதுரை கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளஇப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில், 'அன்பறிவு' படத்தின் ட்ரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், கிராமம், சிட்டி என நடிகர் ஆதி முதல்முறையாக இரு வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

anbarivu hiphop adhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe