hiphop adhi about his travelling flight announced information in tamil

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி,தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகநடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் 'வீரன்' படம் வெளியானது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடிக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட போது தமிழில் ஒலித்த குரலை கண்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில்... என குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், அட தமிழ்ல அறிவிப்பு பண்றாங்களேப்பா என ஒரு சின்ன சந்தோஷம். 'வலப்புறம் 2000 ஆண்டுகள் பழைய பொறியியல் அதிசயமான சோழன் கட்டிய கல்லணையைக் காணலாம். இடப்புறம் கொள்ளிடத்தைக் காணலாம்...' என ஒவ்வொரு அறிவிப்பிலும் பெருமையோடு தமிழில் அறிவித்த அந்தக் குரலின் சொந்தக்காரனை காணவேண்டும் என ஆசை.

Advertisment

சாந்தமான முகத்தோடு வந்த பைலட் பிரியன் விக்னேஷிடம் 'அருமை நண்பா' என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இதில் சிறப்பு என்னவெனில், பிரியன் ஆங்கிலத்தில் அறிவிக்கும்போது அவர் சொல்லச் சொல்ல, இரண்டு வெளிநாட்டு பயணிகள் எட்டி ஆச்சரியத்தோடு கல்லணையை பார்க்க ஜன்னல் அருகே முண்டியடித்தனர்" என குறிப்பிட்டு அது சம்பந்தமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.