Advertisment

நடிகர் செல்லதுரை மறைவு குறித்து ஹிப்ஹாப் ஆதி உருக்கம்!

chelladurai

கத்தி, தெறி, மாரி, நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் செல்லத்துரை, மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். தமிழின் முன்னணி இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவு செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் செல்லதுரை மரணம் குறித்த செய்தி வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் செல்லதுரை மறைவிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், நடிகர் ஹிப்ஹாப் ஆதி நட்பே துணை படத்தில் செல்லதுரையுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். நட்பே துணை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு காணொளியை பகிர்ந்துள்ள ஹிப்ஹாப் ஆதி, நட்பே துணை படப்பிடிப்பு தளத்தில் தினமும் தாத்தாவுடன் ஜாலியாக இருப்போம். நான் இருக்கவரைக்கும் நடிச்சுக்கிட்டே இருக்கனும் என்று அடிக்கடி சொல்வார். நான்பகிர்ந்துள்ள வீடியோ சிங்கிள் பசங்க பாடல் படமாக்கலின் இறுதியில் எடுக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் சோர்வாக இருந்தோம்; அவர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார். அவர் நடிப்பு மீது மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். R.I.P செல்லதுரை தாத்தா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

hiphop adhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe