தமிழ் சினிமாவில்இசையமைப்பாளராகஅறிமுகமான ஆதி, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமாரின் சபதம்’ ஆகிய படங்களில் நடித்துபிரபலமானார். இவர் நடிப்பில்கடைசியாக வெளியான அன்பறிவு படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ஆதி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் ஆதி அடுத்ததாக மரகத நாணயம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான ஏ.ஆர்.கே சரவண்இயக்கும் வீரன் படத்தில் நடிக்கவுள்ளார். சத்யஜோதிநிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதியேஇசையமைக்கவும்உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புபூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புவெளியாகும் எனக்கூறப்பட்டுள்ளது.மேலும் இது குறித்தவீடியோவைதனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தஆதி "வீரன் தயாராகிறான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.