style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
'சீமராஜா' படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தாக ஒரே நேரத்தில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கும் படங்களில் நடிக்கிறார். அதில் ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கே ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியபோது.... "இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு இப்பொழுது முழுமை பெற்று விட்டது என சொல்லலாம். இன்றைய இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒரு இசையமைப்பாளர் வேண்டும் என தீவிரமாக இருந்தோம்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
அந்த தீவிரமே எங்களை ஹிப் ஹாப் ஆதியை ஒப்பந்தம் செய்ய வைத்தது. ஒரு பிரபல இசை அமைப்பாளராக, ஒரு வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி இதற்காக நேரம் ஒத்துக்குவாரோ என்ற சந்தேகம் எழுந்தாலும் அவரை நம்பிக்கையோடு அணுகினோம். கதையை கேட்ட உடனே ஒப்பு கொண்டதற்கு அவருக்கு நன்றி. சிவகார்த்திகேயன் நயன்தாரா ஜோடிக்கு குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்கள் ஆதரவு அதிகம். அவர்களுக்கும் ஹிப் ஹாப் ஆதியை பிடிக்கும் என்பதால் இந்த கூட்டணியின் வெற்றி நிச்சயம் பெரிசாக இருக்கும். எல்லா தரப்பு ரசிகர்களையும் தன் படம் மூலம் கவர்ந்து வைத்து இருக்கும் இயக்குனர் ராஜேஷ் உடன் இருப்பது ஒரு தயாரிப்பாளராக எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. மக்களை கவரும் ஜனரஞ்சகமான படம், மக்களை ஈர்க்கும் ஜனரஞ்சகமான இசை என்று உத்திரவாதமான ஒரு வெற்றி படம் உருவாகிறது என உறுதியாக கூறுகிறேன்" என்றார்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">