பி.டி. சாராக மாறிய ஆதி - கவனம் ஈர்க்கும் போஸ்டர்

hiphop aadhi pt sir first look poster released

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, உள்ளிட்டபடங்களில் நடித்துபிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘அன்பறிவு’ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப்பெற்றது. இதனைத்தொடர்ந்து மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவண்இயக்கும் 'வீரன்' படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே, ஐசரி கணேஷ் தயாரிப்பில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஆதி நடித்து வருகிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. படத்தில் ஆதி, கனகவேல் எனும் கதாபாத்திரத்தில் உடற்பயிற்சி ஆசியராகநடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின்ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு 'பி.டி. சார்' எனத்தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாககஷ்மிரா பர்தேசி நடிக்க அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் படக்குழு, வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில்பொங்கல் விழாவைக் கொண்டாடிய தருணத்தில்வெளியிட்டுள்ளார்கள். அப்போது பேசிய ஐசரி கணேஷ், "ஹிப் ஹாப் தமிழா ஆதி விரைவில் நம் கல்லூரியில் டாக்டர் பட்டத்தைப் பெறவிருக்கிறார். அவர்அரசு பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து தன்னுடைய ஆய்வறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருக்கிறார். அதனால் அவர் இனி டாக்டர் ஹிப் ஹாப் தமிழா ஆதிஎன அழைக்கப்படுவார்என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

isari ganesh
இதையும் படியுங்கள்
Subscribe