Advertisment

உடற்பயிற்சி ஆசிரியராக ஹிப் ஹாப் ஆதி

hiphop aadhi next film announced

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, உள்ளிட்டபடங்களில் நடித்துபிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘அன்பறிவு’ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப்பெற்றது. இதனைத்தொடர்ந்து மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவண்இயக்கும் 'வீரன்' படத்தில் நடித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் ஆதி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க ஆதி கதாநாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றவுள்ளார். இப்படத்தை 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார். இதனைத்தெரிவித்து படத்தின் மோஷன் போஸ்டர் போல ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

Advertisment

இந்த வீடியோவை பார்க்கையில் ஆதி கனகவேல் கதாபாத்திரத்தில் ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசியராக நடித்துள்ளது போல் தெரிகிறது. மேலும் விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாகவும்அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

hiphop adhi Ishri Ganesh!
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe