கான் நடிகரை அடித்தால் 2 லட்சம் பரிசு - இந்து அமைப்பு அறிவிப்பு 

salmankhan

சர்ச்சைகளுக்கு பேர் போன பாலிவுட் நடிகர் சல்மான் கான் தயாரிப்பில் 'லவ்ராத்ரி' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் மாதத்தில் வரும் நவராத்திரி பண்டிகையையொட்டி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ஆக்ராவில் உள்ள ஹிந்து அமைப்பு சார்பாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் இதுகுறித்து ஹிந்து ஹி ஆகேவின் ஆக்ரா நகர தலைவர் கோவிந்த் பராஷர் பேசுகையில்.... "இந்துக்களால் கொண்டாடப்படும், நவராத்திரி பண்டிகையை இழிவு செய்யும் வகையில், 'லவ்ராத்ரி' என சல்மான் கான் தான் தயாரிக்கும் படத்திற்கு பெயரிட்டுள்ளார். மேலும் 'லவ்ராத்ரி' படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இந்த படம் திரையிடப்பட்டால் போராட்டங்கள் நடத்துவோம். 'லவ்ராத்ரி' படத்தை திரையிடும் தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம். இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சல்மான் கானை அடித்து உதைப்பருக்கு ரூ.2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்" என கூறியுள்ளார்.

prabhudeva Salman Khan salmankhan dabangg3
இதையும் படியுங்கள்
Subscribe