Advertisment

விஜய் சேதுபதி மீது இந்து மகாசபா போலீசில் புகார்!

dsgv

நடிகர் விஜய் சேதுபதி மீது திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மகாசபா மாவட்டச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் புகார்மனுகொடுத்தனர்.

Advertisment

அதில்,"ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17.03.2019 அன்று ஒளிபரப்பப்பட்ட 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் முறைகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக,தெய்வங்கள் குளிப்பதைக் காட்டுபவர்கள்ஏன் தெய்வங்களுக்கு உடை மாற்றும் நிகழ்வைக் காட்டுவதில்லைஎன்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனையாகப் பேசியுள்ளார். இது இந்து மதத்தையும், அதன் வழிபாட்டு முறைகளையும்,இந்து கோயில்களில் நடக்கும் ஆகமவிதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி இந்துக்களின்நம்பிக்கையை இழிவு படுத்தியுள்ளார். அந்நிகழ்ச்சியின் நோக்கமே குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி? என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப்பெற்றுள்ளது. அதில் இந்து மத கோயில்களில் அபிஷேக அலங்காரம் முறைகளைப் பற்றி கூற காரணம் என்ன? இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்துமதம்தான் கிடைத்ததா? ஆகையால், காவல்துறை நடிகர் விஜய்சேதுபதி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்துக்களின் உணர்வுகளை மதித்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய இந்து மகாசபை கேட்டுக்கொள்கிறது.

Advertisment

குறிப்பு : இதுபோன்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதத்தினை கையிலெடுக்கும் திரைப்படத்துறையினர் மற்றும் பிற மதங்களுக்குத் தங்களது நடவடிக்கை ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று அகில இந்திய இந்து மகாசபா வலியுறுத்துகிறது'' எனப் புகார் அளித்துள்ளனர்.

vijaysethupathi Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe