மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருமாறு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு அம்மாநில காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூர் மக்கள்வை தொகுதி பாஜகவின் கோட்டை என்று சொல்லப்படுகிறது. இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வாருங்கள் என்று ம.பி. காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது. “ சல்மானிடம் கட்சித் தலைமை பேசியிருக்கது. காங்கிரஸை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.