Skip to main content

நயன்தாரா ஹிட் படத்தின் இந்தி ரீமேக் ; வெளியான புதிய அறிவிப்பு

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Hindi remake of Nayantara hit movie; New announcement released

 

நயன்தாரா நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'கோலமாவு கோகிலா'. நெல்சன் இயக்கியிருந்த இப்படத்தை 'லைகா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்திருந்தது. யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண், குடும்பச் சூழலினால் கொக்கைன் கடத்தல் கும்பலில் சேர்ந்து கடத்தலில் இறங்குகிறார். பின்னர் அதிலிருந்து அவர் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை காமெடி கலந்து சுவாரசியமாகச் சொல்லியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழைத் தொடர்ந்து தற்போது இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. 

 

இந்நிலையில் 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் 'டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்' ஓடிடி தளத்தில் நேரடியாக வருகிற ஜூலை 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'குட் லக் ஜெர்ரி' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. சித்தார்த் சென்குப்தா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்