நயன்தாரா நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியாகிசூப்பர் ஹிட்அடித்த படம் 'கோலமாவு கோகிலா'. நெல்சன் இயக்கியிருந்த இப்படத்தை 'லைகாப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்திருந்தது.யோகிபாபுஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்திற்குஅனிருத்இசையமைத்திருந்தார். ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்,குடும்பச்சூழலினால்கொக்கைன்கடத்தல் கும்பலில் சேர்ந்து கடத்தலில் இறங்குகிறார். பின்னர் அதிலிருந்து அவர் வாழ்க்கை எப்படி மாறியது என்பதைகாமெடிகலந்துசுவாரசியமாகச்சொல்லியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்லவரவேற்பைப்பெற்றது.தமிழைத்தொடர்ந்து தற்போது இந்தியில்ரீமேக்ஆகியுள்ளது.
இந்நிலையில் 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்திரீமேக்கின்ரிலீஸ்தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் 'டிஸ்னிப்ளஸ்ஹாட்ஸ்டார்'ஓடிடிதளத்தில் நேரடியாக வருகிற ஜூலை 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'குட்லக்ஜெர்ரி' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை 'லைகாபுரொடக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'கலர்எல்லோபுரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. சித்தார்த்சென்குப்தாஇயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில்ஜான்விகபூர் நடித்துள்ளார்.