Advertisment

‘அவதாரில் நடிக்க கேட்டார்கள் மறுத்துவிட்டேன்’ -பிரபல ஹிந்தி நடிகர் பேட்டி

கடந்த 2009ஆம் ஆண்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் அவதார். அவதார் செய்த வசூல் சாதனையை முறியடிக்க சுமார் 10 வருடம் எடுத்துக்கொண்டுள்ளது. தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பல கஷ்டங்களுக்கு பின்னர் முறியடித்துள்ளது.

Advertisment

avatar

அவதார் படம் மேலும் நான்கு பாகங்களாக வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது. அவதார் 2 டிசம்பர் 17, 2021 அன்று வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் அவதார் 3, 4,5 படங்களும் 2023, 2025, 2027 ஆகிய வருடங்களில் வெளியாகவுள்ளன.

Advertisment

இந்நிலையில் பாலிவுட் நடிகர் கோவிந்தா அவதார் படத்திற்கு தான் உதவியுள்ளதாக பேசியுள்ளார். அதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “அவதார் என்ற டைட்டிலை நான் தான் ஜேம்ஸ் கேம்ரூனுக்கு கொடுத்தேன். இந்த படம் வெற்றியடையும் என்றேன். இந்த படத்தை எடுப்பது கஷ்டம், 7 வருடம் ஆகும் என்று அவரிடன் கூறினேன். அவர் என் மீது கோபப்பட்டார். எப்படி 7 வருடம் ஆகும் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டார். முடியாத ஒன்றை கற்பனை செய்து பார்க்கிறீர்கள் என்று கூறினேன். நான் சொன்னது போல படம் 8 ஆண்டுகள் கழித்தே வெளிவந்தது. படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக எனது கால்ஷீட் 400 நாட்களுக்கு கேட்டார். ஆனால், நான் உடல் முழுவதும் பெயிண்ட் அடித்துகொண்டு நடிக்க இயலாது என்பதால் மறுத்துவிட்டேன்”என்று கூறியுள்ளார்.

Bollywood avatar
Show comments
Read more...
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe