Advertisment

பிரபல ஹிந்தி நடிகர் ஹிந்தி திணிப்புக்கு எதிராக அட்வைஸ்...

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து 31.5.2019 அன்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

Advertisment

ayushman

இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https:\\mhrd.gov.in என்ற இணையதளத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ள புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisment

பலரும் இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ட்விட்டரில் தமிழ்நாடு ஹிந்தி திணிப்புக்கு எதிராக உள்ளது என்ற ஹேஸ்டேகும் ட்ரெண்டானது. பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக பிரபல ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டே தான் ஒரு பதிவு செய்துள்ளதாக பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளது என்ன என்றால், நெஞ்சை நிமிர்த்தி தேசியம் பேசும் ஹிந்தி பேசுபவர்களே ஹிந்தி மொழியே அதிகமாக பெர்ஸிய மொழி மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கத்தில் இருக்கிறது என்பதை உணர வேண்டும். நீங்கள் தூய்மையான மொழியை பேச வேண்டும் என்று நினைத்தால் திராவிட மொழிகளைதான் பேச வேண்டும். அவைதான் எந்த வெளிநாட்டு மொழிகளின் கலப்பிடமும் இல்லாமல் உருவானது. உலகில் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று. அதனால் ஹிந்தியை போற்றுபவர்கள் அதை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொல்வதும் ஒரு ஹிந்தி மொழி விரும்பிதான். நம் தேசத்தில் பெருமளவு பேசப்படும் மொழி ஹிந்தியாக இருந்தாலும் அதை பேசத் தெரியாவதர்களிடம் திணிக்கக்கூடாது” என்று எழுதியுள்ளார். இதுபோல ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளையும் காக்க வேண்டும், விரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று ஹிந்தி கட்டயாத்திற்கு எதிராக வலுவான எதிர்ப்புகள் வந்ததால், ஹிந்தி கட்டாயமல்ல என்று வரைவு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ayushman khurrana Hindi imposition
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe